தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை? - கமல் பேட்டி! - ராகுல் காந்தி

கர்நாடகத் தேர்தலில் பணியாற்றுமாறு தன்னிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதாக கமல்ஹாசன் கூறிய நிலையில் இது குறித்து நாளை தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat மநீம ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமலஹாசன்
Etv Bharat மநீம ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமலஹாசன்

By

Published : Apr 28, 2023, 8:25 PM IST

மநீம ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன்

கோயம்புத்தூர்: அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், இரு மாவட்டங்களில் இருந்து சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், ''ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஜனநாயகத்தை ஒரு பிள்ளை வளர்ப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். குறுக்கு வழி கண்டுபிடிக்கவே பலரும் முயற்சி. பூட்டு தயாரிக்கும் போதே சாவியையும் கண்டுபிடிக்கிறார்கள். மக்களை மிரட்டி வாழும் எந்த அரசும் பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் பயப்படமாட்டார்கள். கர்நாடகத் தேர்தலில் பணியாற்றுமாறு என்னிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக கர்நாடக தலைமை காங்கிரஸில் இருந்து கடிதம் வந்தது. அவர்கள் வெற்றிக்கு ஒத்துழைப்பு கொடுக்க நாளை முடிவு செய்யப்படும். திராவிடம் என்றால் 2 கட்சிகள் என்கிறார்கள். திராவிடம் நாடு தழுவியது என்கிறோம் நாம். தலைமைப்பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. ஒவ்வொரு சின்ன தொகுதிக்கும் கட்சிக்கு 6000 பேர் வேண்டும். புதுக்கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ? அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும், பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும் உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும்.

மற்ற கட்சிகள் செய்கிறார்களே என்று கூறிகொண்டு இருக்க வேண்டாம். குறை கூறுவதை மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு செவிசாய்க்கமாட்டேன். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவிசாய்ப்பேன். நம் மீது மக்கள் வைத்திற்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது. தேர்தல் கூட்டணி குறித்து எல்லாம் இப்போது பேச வேண்டாம். அதற்கு நேரம் இன்னும் இருக்கிறது.

என் வீட்டில் குளியல் அறைக்கும், பாத்ரூமுக்கும் தான் கதவுகள் இருக்கும். திறந்த கதவு தான் என் வீடு. மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும். மற்றவர்களுக்கு நல்ல பண்புகளை கொடுக்கும் வீட்டிற்குப் பூட்டு தேவை இல்லை. கர்நாடகத் தேர்தல் அழைப்புகளுக்கான முடிவை பின்னர் எடுப்பேன்.

இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் நீங்கள் சாமி கும்பிடும் உரிமையைப் பறித்தால் குரல் கொடுப்பேன். நீங்கள் செய்யும் வேலை தான் நான் எடுக்கும் முடிவுகளை முடிவு செய்யும். நான் 2024-க்கு என்ன நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ? அதற்கு இப்போதே வியர்வை சிந்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம். இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும். கர்நாடகத் தேர்தலுக்காக பெங்களூரு சென்று பரப்புரை செய்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம். என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்’’என்றார். சட்டப்பேரவையில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெறத் திட்டமா என்ற கேள்விக்கு ''இருக்கலாம்; அது நல்ல எண்ணம் தானே'' எனப் பதில் அளித்தார்.

இதையும் படிங்க:இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - கருணாஸ் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details