சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுவருகிறது.
கமல் சர்ச்சை பேச்சு எதிரொலி: சூலூர் பரப்புரைக்கு தடை - காவல்துறை
கோவை: சர்ச்சை பேச்சு எதிரொலியாக சூலூர் தொகுதியில் கமல் பரப்புரை செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (மே 17) சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டு இருந்தது. சூலூர், பாப்பம்பட்டி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 13 இடங்களில் பரப்புரை செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
தற்போது கமல்ஹாசனுக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் கருப்பு கொடி போராட்டம் அறிவித்து இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணமாக காட்டி சூலூர், கருமத்தம்பட்டி காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.