தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளிக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் வழக்குரைஞர் இருக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - கள்ளிக்குடியில் வாக்கு தேர்தல் முடிவு வெளியாகும்

மதுரை: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளை எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை முதல் முடிவு அறிவிக்கும் வரை வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் வழக்கறிஞரும் உடனிருக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளிக்குடியில் வாக்கு தேர்தல் முடிவு வெளியாகும் வரை வழக்குரைஞர் இருக்க கோரிய வழக்கு தள்ளுபடி!
கள்ளிக்குடியில் வாக்கு தேர்தல் முடிவு வெளியாகும் வரை வழக்குரைஞர் இருக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

By

Published : Dec 20, 2019, 10:56 PM IST

மதுரை கள்ளிக்குடியை சேர்ந்த எஸ். ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

மனுவில், “கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குராயூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். தலைவர் தேர்தலில் நான் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் ஓட்டு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு என்னை தோல்வி அடைந்ததாக அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே குராயூர் ஊராட்சி தலைவர், 13 ஊராட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் போது எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கும் வரை வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஓட்டு எண்ணிக்கையின் போது வழக்கறிஞர்களை அனுமதிக்க விதியில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details