கோவை அம்மன் குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் மூன்று வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.