தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஜெயலலிதாவின் அறிக்கையை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்’ - நீதியரசர் ஆறுமுகசாமி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து சந்தேகம் இருந்தால் ஜெயலலிதாவின் அறிக்கையை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம் என நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 19, 2022, 11:02 PM IST

ஜெயலலிதா இறப்பு குறித்து பேசிய நீதியரசர் ஆறுமுகசாமி

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வழக்கறிஞர்கள் மத்தியில் ஆறுமுகசாமி மேடையில் பேசும்போது, ’நாம் எடுக்கும் வழக்கு சரியா தவறா என வழக்கறிஞர்கள் முடிவு செய்வதை விட நீதிமன்றத்திடம் கொடுத்து விட வேண்டும்’ என அறிவுரை வழங்கினார். நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றியே என்னிடம் கேட்டார்கள்.

நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால், அவரது (ஜெயலலிதா) வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒபிசிட்டி, சுகர், பிபி இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கிய விசயம்.

அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்தேன். லேப்டாப் முன் உட்காருங்கள், இதனை எழுதுங்கள்.

இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல, ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிழக்கு லடாக் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details