தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் மதநல்லிணக்க கூட்டம்: கோட்டை ஈஸ்வரன் கோயில் சென்ற ஜமாஅத் நிர்வாகிகள்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நடந்த மத நல்லிணக்க கூட்டத்தில் ஜமாஅத் அமைப்பினர்கள் கலந்துகொண்டனர்.

kottai Iswaran Temple  coimbatore  Jamaat administrators  Jamaat  கோட்டை ஈஸ்வரன் கோயில்  ஜமாத் நிர்வாகிகள்  மதநல்லிணக்க கூட்டம்  கோட்டை ஈஸ்வரன் கோயில் சென்ற ஜமாத் நிர்வாகிகள்
கோட்டை ஈஸ்வரன் கோயில் சென்ற ஜமாத் நிர்வாகிகள்

By

Published : Nov 3, 2022, 3:01 PM IST

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். தற்பொழுது இந்த வழக்கை NIA என்னும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.

சம்பவத்தைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் அமைப்பினர், இந்து அமைப்புகள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள், கோயிலில் சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கோயிலுக்கு கோவை கோட்டைமேடு பகுதியைச்சேர்ந்த ஜமாஅத் அமைப்பினர், உலாமாக்கள் வருகை புரிந்து, கோயில் பூசாரிகளை சந்தித்துப் பேசினர்.

கோயிலுக்கு வந்த ஜமாஅத் நிர்வாகிகள், உலாமாக்களுக்கு கோயில் பூசாரிகள் வரவேற்று பட்டுத்துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த சந்திப்பு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து செய்தியாளர்களைச்சந்தித்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், இணையத்துல்லா, 'மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை சிவன் கோயில் நிர்வாகிகளை சந்தித்தோம். ஏழு தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வசித்துவருகிறோம். அண்ணன், தம்பிகளாக அனைத்து மதத்தினரையும் பார்த்துவருகிறோம்.

கார் வெடிப்பு சம்பவத்தை, எங்கள் அமைப்புகள் கண்டிக்கிறது. பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மை மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம். உங்களோடு நாங்கள், எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களையும் முன்னெடுக்க உள்ளோம். எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்கமாட்டோம்.

கோட்டை ஈஸ்வரன் கோயில் சென்ற ஜமாஅத் நிர்வாகிகள்

சிறுவயதிலிருந்து அனைவரும் ஒன்றாக இருந்தது குறித்து எல்லாம் பேசினோம். தேர்த் திருவிழாவின்போது ஒத்துழைப்பு கொடுத்தது எல்லாம் பேசினோம். இந்து - இஸ்லாமியர்களின் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதரீதியான பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டாம். ஆன்மிகத்தையே பின்பற்றும் எங்களை அமைதியாக வாழ விடுங்கள்' எனக்கூறினார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி; பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details