தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐடி படிப்பிற்கு பள்ளிகளிலேயே பயிற்சி: தொழில் நுட்பத்துறை அமைச்சர் பேச்சு - தொழில்நுட்பத்துறை அமைச்சரின் திட்டம்

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் ஐடி துறைகளுக்கு வரும்பொழுது பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர் எனவும், அதை போக்குவதற்குப் பல்வேறு வழிமுறைகள் எடுக்க உள்ளதாகவும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஐடி படிப்பிற்கு பள்ளிகளிலே பயிற்சி : தொழில் நுட்பத்துறை அமைச்சர் பேச்சு
ஐடி படிப்பிற்கு பள்ளிகளிலே பயிற்சி : தொழில் நுட்பத்துறை அமைச்சர் பேச்சு

By

Published : Dec 31, 2021, 12:05 PM IST

கோவை:ஈச்சனாரிப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான ஆய்வுக்கூட்டம் 2 நாட்களாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று கலந்து கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்பாளர்களும் தொழில் முனைவோரும் பல பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதிலிருந்து, பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. புதுமைகளை கண்டுபிடிப்போர்,தொழில் முனைவோரைத் தமிழ்நாடு அரசு வரவேற்கிறது' என்று தெரிவித்தார்.

ஐடி படிப்பிற்குப் பள்ளிகளிலேயே பயிற்சி:

மேலும் பேசிய அவர், 'தமிழ்நாட்டில் ஐடி படிப்பினைப் பெறுவதற்குத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தாலும் ஐடி போன்ற துறைகளுக்கு வரும் போது சவால்களை எதிர்கொள்கின்றனர்.

அந்தச் சவால்களை எளிதில் போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்களைக் கொண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா உட்பட தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'ரஜினியின் ரசிகனாக.... ; ஜெ. தீபா இதைச் செய்யணும்' - கலகல செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details