தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணையத்தில் மாணவியின் ஆபாச போட்டோ பதிவிட்ட உறவினர்கள் கைது! - Morphing a photo of a medical student

கோவை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த ஐடி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

"இணையத்தில் பரவிய மாணவியின் ஆபாச புகைப்படம்": போலீசாரிடம் சிக்கிய ஐடி ஊழியர்கள்
"இணையத்தில் பரவிய மாணவியின் ஆபாச புகைப்படம்": போலீசாரிடம் சிக்கிய ஐடி ஊழியர்கள்

By

Published : Feb 22, 2023, 7:27 PM IST

கோயம்புத்தூர்:வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா ஐ.டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கௌசல்யா தனது உறவுக்கார பெண்ணை பழிவாங்கும் நோக்கில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற ஆண் நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கைது கெளசல்யா மற்றும் அவரது ஆண் நண்பர் கோபாலகிருஷ்ணன் புகைப்படம்

இந்த ஆபாச புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்களுடன் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌசல்யா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் கொடூரக் கொலை.. மனித தலை உடன் சுற்றித்திரிந்த நபர் கைது..

ABOUT THE AUTHOR

...view details