கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தொகுதி ஆனைமலை அருகே தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி, திமுக கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் தங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனைமலை தனியார் விடுதியில் பணப் பட்டுவாடா? - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர்: ஆனைமலை அருகே தனியார் தங்கும் விடுதியில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
![ஆனைமலை தனியார் விடுதியில் பணப் பட்டுவாடா? ஆனைமலை தனியார் விடுதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11252738-thumbnail-3x2-ui.jpg)
ஆனைமலை தனியார் விடுதி
இந்நிலையில் வேட்பாளர்கள் தங்கியுள்ள விடுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வால்பாறை தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை குழுவினர் மற்றும் வருமானவரித் துறையினர் இணைந்து தங்கும் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். நேற்றிரவு (ஏப்.1) முழுவதும் நடந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:எதிர்க்கட்சியை அடக்கி ஒடுக்க, மத்திய அரசு வருமான வரித்துறை பயன்படுத்துகிறது- காங்கிரஸ்