கோயம்புத்தூர்: கோவை அருகே வடவள்ளியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தீவிர சோதனை செய்தனர். இதேபோல், இந்த கட்டுமான நிறுவனத்தில் இயக்குநர்கள் வீடுகளில் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க:"சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!