இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரையின் தந்தை மயில்சாமி இன்று (ஜன.26) காலமானார். அவருக்கு வயது 86.
இஸ்ரோ விஞ்ஞானியின் தந்தை காலமானார்! - coimbatore district news
கோயம்புத்தூர்: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தை இன்று (ஜன.26) காலமானார்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தை காலமானார்
இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 10 நாட்களாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மயில்சாமி, இன்று காலை சுமார் 8 மணியளவில் காலமானார். அவரது கண்கள் தானம் செய்யப்படவுள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘தனியார் பங்களிப்பின் மூலம் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - மயில்சாமி அண்ணாதுரை