அண்மையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகரான டெல்லி போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள பள்ளிவாசல் முன்பு பொள்ளாச்சி ஷாகீன் பாக் ஒருங்கிணைப்புக் குழு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.