நேற்று இரவு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்த் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி கட்சியினர், கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து முன்னணி அமைப்பினர் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், கோவையில் கலவரத்தை ஏற்படுத்த நாட்டம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்து முன்னணியை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நாளை கடையடைப்பு மேலும் அவர், இந்த பயங்கரவாத அமைப்பை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.