தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈஷா வளாகத்திற்கு வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ! - isha yoga foundation lorry fired

கோவை: ஈஷா வளாகத்திற்கு வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீ பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.

isha yoga foundation lorry fired  முள்ளங்காடு லாரி தீ விபத்து
தீயில் கருகிய லாரி

By

Published : Feb 4, 2020, 9:02 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து லாரியொன்று ஈஷா வளாகத்திலுள்ள மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றிவந்தது. முள்ளங்காடு அருகே வந்துகொண்டிருந்த அந்த லாரி எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் உரசியதில் லாரி மற்றும் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

தீயில் கருகிய லாரி

உடனே சுதாரித்துக்கொண்ட லாரியின் ஓட்டுநர் கீழே இறங்கி ஓடியதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில், லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

இதையும் படிங்க:5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - செங்கோட்டையன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details