தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கட்சி, மதம், சாதி பாகுபாடின்றி வாக்களியுங்கள்' - ஜக்கி வாசுதேவ்

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் கட்சி, மதம், சாதி பாகுபாடின்றி கிராம முன்னேற்றத்திற்காகச் செயல்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் கேட்டுக்கொண்டார்.

Isha Yoga Center Founder Jackie Vasudev Vote polling
Isha Yoga Center Founder Jackie Vasudev Vote polling

By

Published : Dec 30, 2019, 2:14 PM IST

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கோவையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டுஉறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "உள்ளாட்சித் தேர்தல் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மக்களுக்கு இதன் முக்கியத்துவம் முழுமையாகத் தெரியவில்லை. அமைப்பானது கிராமத்திலுள்ள சிறிய நாடாளுமன்றம் போன்றது.

ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேட்டி


இந்தத் தேர்தலால் கிராம மக்களின் தேவையை தீர்வுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. அதை மக்கள் முழுமையாக பயன்படுத்தி பொறுப்பாக இருப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கட்சி, மதம், சாதி பாகுபாடின்றி கிராம முன்னேற்றத்திற்காகச் செயல்படுபவர்களைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க;

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 28.81 விழுக்காடு வாக்குப்பதிவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details