கரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் கரோனா நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதன்மூலம், 17 பஞ்சாயத்துக்களில் உள்ள சுமார் 2 லட்சம் கிராம மக்கள் பயன்பெறுகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் எனப் பல தரப்பினருக்கும் உதவும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஈஷா பிரம்மாச்சாரிகள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
43 கிராமங்களைத் தத்தெடுத்த ஈஷா! - corona
கோயம்புத்தூர்: ஈஷா அவுட்ரீச் அமைப்பு 43 கிராமங்களைத் தத்தெடுத்து கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் கிராமப்புறங்களில் கீழ்கண்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1.தினமும் சுமார் 1.2 லட்சம் பேருக்கு நிலவேம்பு அல்லது கப சுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
2. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி, ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் 'சிம்ம க்ரியா', 'சாஷ்டாங்கா' என்ற இரண்டு எளிய யோகப் பயிற்சிகளை 1.5 லட்சம் பேருக்கு கற்றுக்கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
3. ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் கரோனா தடுப்பு வழிமுறைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
4. 2,500 முன் களப்பணியாளர்களுக்கு முகக் கவசம், சானிடைசர்கள் வழங்கப்படுகிறது.
5. ஏழு அரசு மருத்துவமனைகளில் தினமும் கிருமி நாசினி தெளிப்பதற்கு உதவிகள் செய்து தரப்படுகிறது.
6. கரோனா பாதித்த நோயாளிகளை கரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உதவி செய்யப்படுகிறது.
7. தேவை ஏற்பட்டால், கட்டுப்பாடு பகுதிகளில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கும், மக்களுக்கும் உதவிகள் செய்து தரப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி அளித்த அன்புமணி: எவ்வளவு தெரியுமா?