தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய 2 பேர்.. பின்னணி என்ன? - இரண்டு பேரிடம் விசாரணை

கோவையில் ஆன்லைனில் வெடி மருந்துக்கு தேவையான வேதிப்பொருள் வாங்கிய இரண்டு பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், மாநகர காவல் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 23, 2022, 8:02 PM IST

கோவையில் கார் வெடிப்பு சம்பவம், மங்களூருவில் குக்கர் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெடி மருந்து பொருட்கள் வாங்குபவர்களை கண்காணித்து வருகின்றனர். அதேபோல, ஆன்லைனில் வெடி மருந்துக்குப் பயன்படும் வேதிப்பொருட்கள் வாங்குபவர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 13ஆம் தேதி கோவை குரும்பபாளையத்தைச்சேர்ந்த செந்தில் குமார் என்பவர் Flipkart-ல் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து, அதே மாதம் 20ஆம் தேதி வாங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை போலீசார் செந்தில் குமாரை கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், மேற்படி செந்தில் குமார் பொருட்களைத் தான் வாங்கவில்லை என்றும், தான் பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பழைய வியாபாரம் செய்து வருவதாகவும்; தனது கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர்தான், தனது செல்போன் மூலம் ஆன்லைன் மூலமாகப் பொருட்கள் வாங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், தனது எதிரியான மகாராஜன் என்பவரை, குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் வாங்கியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, மேல் விசாரணையை சரவணம்பட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய 2 பேர்.. பின்னணி என்ன?

இதையும் படிங்க: தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details