கோவை பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில், அவரது டெம்போ வாகனம் பழுதடைந்ததால், அதனை சரிசெய்ய நீலாம்பூரில் உள்ள வாகனம் பழது பார்க்கும் கடைக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வாகனமானது அவிநாசி சாலை வழியாக பீளமேடு சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி அருகே வந்தபோது, முன்பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. இதைபார்த்த முருகன் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்குள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே முருகன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.