உலக யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி யோகா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், குறிப்பாக பெண்களின் மனம், உடல் ஆரோக்கியத்தில் யோகாசனத்தின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவும், பொள்ளாச்சி டாப்ஸ் யோகா மையம் சார்பில் பெண்கள் மட்டும் பங்கேற்ற யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
யோகா: பொள்ளாச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக சாதனை! - பொள்ளாச்சியில் உலக சாதனை
கொயம்பத்தூர்: உலக யோகா தினத்தையொட்டி பொள்ளாச்சியில் உலக சாதனைக்காக பெண்கள் மட்டும் பங்குபெற்ற யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
yoga
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகில் நடைபெற்ற கூட்டு யோகாசனத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் குடும்பப் பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு உலக சாதனைக்காக உற்சாகமாக யோகாசனம் செய்தனர்.
பிராணயாமம், சூரிய நமஸ்காரம், தாடாசன், ஓம் மந்திரம் உச்சரித்தல் என பல்வேறு விதமான ஆசனங்களைச் செய்தனர்.