தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டிப்போட்ட வட்டி: வீடு புகுந்து இளைஞரைத் தூக்கிய கந்து வட்டிக்காரர்!

கோவை: வாங்கிய கடனுக்கு வட்டி கேட்டு துன்புறுத்தியதோடு, கடன் வாங்கியவரை வீடு புகுந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்கள்
காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்கள்

By

Published : Jun 13, 2020, 8:24 AM IST

கோவை கெம்பட்டி காலனி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவரின் மகன் அங்குராஜ். இவர் தங்க வேலை செய்துவருகிறார். இன்று கடைவீதி காவல் துறையினர் அவர்கள் வீடு புகுந்து அங்குராஜை அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால் காஞ்சனா காவல் நிலையம் சென்று விசாரித்ததில் அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து காஞ்சனா அவரது மாற்றுத்திறனாளி மகள், மகனின் குழந்தைகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரில், 2016ஆம் ஆண்டு குடும்பத் தேவைக்காக அங்குராஜ் நாகேந்திரன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனால் அதற்கு வட்டியுடன் சேர்த்து எட்டு லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க வலியுறுத்தி, அடிக்கடி நாகேந்திரன் மிரட்டியுள்ளார்.

பேட்டி: காஞ்சனா

கடந்த மே 24ஆம் தேதி வீட்டுக்குள் புகுந்து நாகேந்திரனின் அடியாள்கள் தகாத வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தியதோடு, பணத்தைத் தராவிட்டால் உயிரோடு இருக்க மாட்டாய் என்று மிரட்டியுள்ளனர். அதோடு மட்டுமின்றி ஜாப் ஆர்டர் நோட்டில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. எனவே மாநகர காவல் ஆணையர் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும், நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அழைத்துச் சென்ற மகனை கண்டுபிடித்து தரவேண்டும்" என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:என்னை கடிப்பியா? பையில் பாம்போடு மருத்துவமனைக்குச் சென்ற போதை ஆசாமி!

ABOUT THE AUTHOR

...view details