கோடைகாலம் தொடங்கியதை அடுத்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனத் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி கோவை மருதமலை வனப்பகுதியில், கோடை காலங்களில் காட்டுத்தீ ஏற்படும்போது, மற்ற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுக்கும் வகையிலும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.