கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு அருகே, கடந்த 20ஆம் தேதி, நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது, பார்ச்சுனர் சொகுதசு கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஒருவர் இறந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு காவல்துறையினர், விபத்து தொடர்பாக, பொள்ளாச்சி அருகேயுள்ள அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் (33) என்பவரை கைது செய்தனர். விபத்தை எற்படுத்திய சொகுசு கார் நூல்மில் அதிபர் ஒருவருக்குச் சொந்தமானது.
ரூ. 12 ஆயிரம் லஞ்சம்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநரை பிணையில் விட ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என, தனியார் நூல்மில் மேலாளரான ரமேஷ்குமார் என்பவரிடம், கிணத்துகடவு ஆய்வாளர் சுரேஷ் , தலைமைக் காவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் கேட்டுள்ளனர்.