கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தைச் சேர்ந்த பிரபாகரனின் மனைவி மலர்விழி பிரசவ வலி காரணமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை பிறந்து, மறுநாள் அக்குழந்தைக்கு தடுப்பூசியும் போடப்பட்டது.
18 நாட்களாக குழந்தையின் தொடையில் இருந்த ஊசியின் நுனிப்பகுதி! - ஆணையம்
கோயம்புத்தூர் : தடுப்பூசி போடப்பட்ட குழந்தையின் தொடைப்பகுதியில் ஊசியின் சிறு பகுதி முறிந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஊரக சுகாதாரத் துறை இயக்குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தொடர்ந்து வீக்கம் அதிகரித்துள்ளது. இதனை பரிசோதித்த மலர்விழி, ஊசியின் நுனிப்பகுதி 18 நாட்களாக தொடையில் இருப்பதை கண்டு உடனே அதை அகற்றினார்.
இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தி அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும், இதுகுறித்து ஊரக சுகாதாரத் துறை இயக்குனர் இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.