கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதுாரில் உள்ள தோட்டம் அருகே, பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலுள்ள புதரில் அழுதபடி இருந்தது. அவ்வழியாகச் சென்றோர், புதரில் சேலை சுற்றி தொப்புள் கொடியுடன் குழந்தை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆனைமலை பகுதியில் பச்சிளம் குழந்தை மீட்பு! - பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை
பொள்ளாச்சி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தையைப் புதரில் வீசி சென்ற தாயை ஆனைமலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆனைமலை பகுதியில் பச்சிளம் குழந்தை மீட்பு
அதன் பின்பு பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்டு ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை வீசி சென்ற தாயை ஆனைமலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே ஊரில் 12 இடங்களில் கொள்ளை; கிராம மக்கள் பீதி