தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி கைது ஒரு சின்ன மேட்டர்: அமைச்சர் டிஆர்பி ராஜா கருத்து

புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுகவை கட்டுப்படுத்த நினைத்தால் இருப்பதை விட வேகமாக வெளியே வருவோம் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 14, 2023, 5:21 PM IST

தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையில் பேட்டி
தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையில் பேட்டி

அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

கோவை:ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் பார்க் அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டைடல் பார்க் மற்றும் எல்கார்ட் ஆகிய இடங்களில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து உள்ளோம். கோவையில் அதிகமான வளர்ச்சி கொண்டு வரும் நோக்கில், புதிய திட்டங்கள் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.நிலம் வாங்கவும், புதியக் கட்டிடங்களை கொண்டு வருவதற்கான வேலைகளையும் முதல்வர் அனுமதியுடன் செய்து வருகிறோம்” என்றார்.

மேலும், முன்னதாக லூலூ மால் அமைக்க செங்கல் கூட கொண்டு வர முடியாது என அண்ணாமலை பேசி இருந்த நிலையில் இன்று லூலூ மால் திறக்கப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “லூலூ மால் கட்டி முடித்து இருக்கின்றனர். இன்று தொடங்கப் போகிறோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜகவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத் தனமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்” என்று டிஆர்பி ராஜா பதிலளித்தார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக திமுக வெளியே வரும். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து செந்தில் பாலாஜி வெளியே வருவார். திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் திமுக. கருணாநிதியின் வளர்ப்பு நாங்கள். முதலமைச்சரின் தம்பிகள் நாங்கள். இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. இது எல்லாம் சின்ன மேட்டர். நிறைய பார்த்து விட்டோம். செந்தில் பாலாஜி சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார். பதவியில் இருப்பதால் ஆடுகிறார்கள். திமுக மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சருக்கு நற்பெயர் உருவாகி இருக்கிறது. மேலும் முதலமைச்சர் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளைக் கொண்டு சேர்க்கிறார். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதைக் கண்டு பயப்பட்டு, அவர்களிடம் இருக்கும் துறைகளை விட்டு ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவைப் பற்றி தெரியவில்லை. நாங்கள் யார் என்பதை முதலமைச்சர் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Senthil Balaji: கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details