கோயம்புத்தூர்:அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கான தொழில் துறை வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 21) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசினார்.
தொழில் முனைவோர்களிடையே பேசிய அவர், "நாடு எப்போதும் இல்லாத வகையில் பெருந்தொற்று காலத்தை சந்தித்து வருகிறது.
இந்த சவாலான காலகட்டத்தில் தொழில் துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும்.
பாதிக்கப்பட்ட துறைகளை மீட்க வேண்டும்
பாரம்பரியமாகத் தொழில் முனைவோர்களின் மேம்பாடு, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் என இருவேறு விதமாகப் பார்க்க வேண்டியுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை மீட்டெடுக்க வேண்டும்'' என்றார்.
தொழில்துறை வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் "மேலும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. மக்கள் கேட்கின்றவற்றை உடனடியாக செய்து தரும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது" என்று தெரிவித்தார்.
தொழில் துறை வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது... இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஆலோசனை கூட்டம்