தாய்லாந்தில் வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை ஆசியா ஒசனியா பகுதி நாடுகளுக்கு இடையிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது . இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சீனா, ஈரான், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஆசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: கோவையில் இந்திய அணி தீவிர பயிற்சி! - ஆசிய சக்கர நாற்காலி சாம்பியன்ஷிப்
கோவை: தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய அணி வீரர்கள் பெரியநாயக்கன்பாளையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில், இந்திய அணி முதல் சுற்றுப் போட்டியில் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஈராக் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய ஆடவர் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியினர், கோவை பெரியநாயக்கன் பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயாவிலுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ஆடவர் அணியில் ஐந்து மகாராஷ்டிரா வீரர்கள், தமிழ்நாடு, பஞ்சாப் டில்லி, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா மூன்று வீரர்கள் என மொத்தம் 13 வீரர்கள், பயிற்சியாளர்களான சரத் நாகனே, தாயுமா சுப்ரமணியன் ஆகியோருடன் தாய்லாந்து செல்லவுள்ளனர். இந்த வீரர்களுக்கு வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் மும்பையை சேர்ந்த மெஷாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் சார்பாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 14 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.