கோயம்புத்தூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், கேரளாவை சேர்ந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித், ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் மரூப்ர்ரோலு ஜஸ்வந்த் ரெட்டி ஆகிய இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த வீரர்களின் உடல் ராணுவ விமானம் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நைப் சுபேதார் ஸ்ரீஜிதின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சேர்மஞ்சேரி பகுதி என்பதால் அவரது உடல் ராணுவ விமானம் மூலம் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.