கோயம்புத்தூர்:கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி தம்பதியினரின் மகன் முத்து, 8 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேம்ரூன் நாட்டில் தங்கி, ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அதே நிறுவனத்தில் அக்கவுன்டன்ட்டாகப் பணியாற்றி வந்த 'எம்மா எஞ்சிமா மொசொக்கே' என்பவரின் மகளான 'வால்மி இனாங்கா மொசொக்கேக்கும்' இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.