இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் இந்தியன் வங்கியுடன் இணைந்து ஜவுளி வளர்ச்சிக்கு கூடுதல் கடன் உதவி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி சார்பில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் கடன் வழங்குவது, சூரியசக்தி திட்டம், சூரிய ஒளி கூரை அமைப்பதற்கான கடன் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான பத்மஜா சந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பத்மஜா இந்தியன் வங்கி இந்த நிதியாண்டில் 12 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியன் வங்கியின் மொத்த கடன் திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் 19 விழுக்காடு எனவும், ஜவுளித் தொழிலை மேம்படுத்த 48 ஆயிரம் யூனிட்டுக்கு 1700 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வங்கி நிர்வாக இயக்குனர் பத்மஜா செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அவர், வரும் ஆண்டில் இந்தத் தொகை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், வங்கியின் மொத்த வர்த்தகம் 8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக சீர்மிகு அந்தஸ்து விவகாரம்...