தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிநவீன தேஜஸ் போர் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்ப்பு...! - LCA Tejas squadron

கோவை: சூலூர் விமான தளத்தில் இந்திய விமான படை தளபதி மார்சல் பதவுரியா முன்னிலையில் தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி விமானம் இன்று விமான படையில் இணைக்கப்பட்டது.

Indian Air Force to operationalise second LCA Tejas squadron
Indian Air Force to operationalise second LCA Tejas squadron

By

Published : May 27, 2020, 4:16 PM IST

கோவை மாவட்டம் சூலூர் விமான படைத் தளத்தில் 18ஆவது ஸ்குவாட்ரன் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இன்று செயல்பாட்டுக்கு வருகின்றது. இந்திய விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 ஐ.ஓ.சி வகையை சேர்ந்த 20 விமானங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் இன்று இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது. சூலூரில் உள்ள இந்திய விமான தளத்தில் இந்திய விமான படை தளபதி மார்சல் பதவுரியா முன்னிலையில் இந்த தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி விமானம் இன்று விமான படையில் இணைக்கப்பட்டது.

சூலூர் விமான தளம்
நவீன ரக தேஜஸ் விமானம் இருந்த அரங்கை ரிப்பன் வெட்டி இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதவுரியா திறந்து வைத்தார். பின்னர் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்ட சர்வ தர்ம பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக விமானம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தேஜஸ் விமானத்திற்கு சர்வ தர்ம பூஜா
இதனை தொடர்ந்து இந்திய விமான படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த சகாச நிகழ்வுகளை இந்திய விமான படை தளபதி, எச்.சி.எல் அலுவலர்கள் பார்வையிட்டனர். விமான படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசங்களை செய்து காட்டின. இதனை தொடர்ந்து எச்.ஏ.சி அலுவலர்கள் புதிய தேஜஸ் விமானத்தின் ஆவணங்களை இந்திய விமான படை ஏர்சீப் மார்சல் பதவுரியாவிடம் ஓப்படைத்தனர். தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி நான்காவது தலைமுறை போர்விமானமாகும். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. போர்விமானங்களிலேயே தேஜஸ் விமானம் சிறிய மற்றும் எடை குறைந்த விமானமாகும்.
அதிநவீன தேஜஸ் போர் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்ப்பு
இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் இந்திய விமான படை தளபதி மார்ஷல் பதவுரியா, விமான படை வீரர்கள் மத்தியில் பேசினார். அதில், ''சூலூர் விமான படை தளத்தில் இரண்டாவது தேஜஸ் எப்.ஒ.சி விமானம் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தேஜஸ் விமானம் அதிநவீன தொழில் நுட்பதிலும் முதன்மையானது. கோவிட் - 19 சூழலிலும் நாம் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விமான தயாரிப்பில் தனியார் மற்றும் சிறுகுறு உற்பத்தியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த விமான தயாரிப்பு நமக்கும் நம்முடைய நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details