சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, காலியாக உள்ள சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நபராக கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நுர் முகமது என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். நுர்முகமது கோமாளி வேடமணிந்தபடி சூலூர் வட்டாச்சியர் அலுவலகம் வந்தார். அப்போது சாலையில் சென்றவர்கள், சாலையோர கடைகளில் நின்றவர்களிடம் கை குலுக்கி ஆதரவு கேட்டார்.
கோமாளி வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்! - byelection
கோவை: சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோமாளி வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கோமாளி வேடம்
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை 31 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நுர்முகமது, 32-வது முறையாக சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.