கோவை மாவட்டம் மயிலம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு கணேசன் என்பவரது மனைவி விஜயா சுயச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் சூலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மையத்தில் மைலம்பட்டி ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதனை சுயேச்சை வேட்பாளர் விஜயா கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்போது திடீரென விஜயா மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வெளியே தூக்கி வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால் அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் விஜயாவை சுமார் 500 மீட்டர் தூக்கிக்கொண்டு ஓடினர்.