சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மைய நிறுவன வாசுதேவ், சிறப்பு அழைப்பாளர்களாக காமன்வெல்த் போட்டியின் பொதுச் செயலாளர் பெட்ரீசா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் ஜி20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹர்த்வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை காமன்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரீசா ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் சிறப்பு உழைப்பாளர்களும் கண்டு களித்தனர். இதில் சிறப்பாக அழைப்பாளர்கள் மற்றும் ஈஷா யோகா மையம் நிறுவனர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈசா யோகா மைய நிறுவனர் வாசுதேவ், 75வது சுதந்திர தின விழா மிகவும் மகத்தான நாள் மக்களின் உறுதி தான் இதில் உள்ளது மக்களின் உறுதியினாலும் தெம்பினாலும் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும். தமிழ் என்றாலே தெம்பு தான். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு மகத்தான நாடாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வெயில் காலங்களில் மண்ணைக் காப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்காக செயல்பட உள்ளோம்.