தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பறையில் சிறுத்தைப்புலி அட்டகாசம் அதிகரிப்பு - attraction

கோவை: வால்பாறையில் தொடர்ந்து வரும் சிறுத்தைப்புலி அட்டகாசத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தைப்புலி

By

Published : Jun 24, 2019, 11:50 PM IST

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த அய்யர்பாடி பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதியில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி ஒன்று மாட்டைத் தாக்கிக் கொன்றது. இதைப்பார்த்த எஸ்டேட் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளிவராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும், எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பைச்சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களும், செடிகளும் படர்ந்து வளர்ந்துள்ளதால், சிறுத்தைப்புலி அந்த புதருக்குள் மறைந்திருப்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொல்லைக் கொடுக்கும் சிறுத்தைப்புலியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகில் உள்ள அடர்ந்த புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details