கோயம்புத்தூர்: அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், அவருக்கு சொந்தமாக உள்ள அனைத்து இடங்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிபுரிபவர்கள் வீட்டில் சோதனை
மேலும் அவருக்கு தொடர்புடையோர் என பலர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் வேலுமணியின் அண்ணனான அன்பரசு தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்திவரும் திருமலைசாமி என்பவரின் உறவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து திருமலைசாமி வீட்டில் அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமலைசாமி உறவினர் 15 ஏக்கர் தோட்டம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்...மாநில இடஒதுக்கீடு எப்படி பொருந்தும் - உயர் நீதிமன்றம் கேள்வி