கோயம்புத்தூர்: அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான வடவள்ளி சந்திர சேகர், கேசிபி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளர் ஆவார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு டெண்டர் பணிகள் இந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.