தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Christmas special: 750 கிலோ ராட்சத கேக் தயாரிக்கும் பணி தீவிரம்! - Christmas special cake

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 750 கிலோ எடையில் ராட்சத பிளம் கேக் தயாரிக்கும் பணியை தனியார் உணவகம் மேற்கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகை

By

Published : Dec 11, 2022, 4:37 PM IST

வந்தாச்சு கிறிஸ்துமஸ்: 750 கிலோவில் ராட்சத கேக் தயாரிக்கு பணி தீவிரம்

பொள்ளாச்சி: டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஊஞ்சவளம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் கேக் தயாரிப்பு பணி நடைபெற்றது.

அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை,பேரீச்சை உள்ளிட்ட13 வகையான உலர் பழங்கள் மற்றும் உயர்ரக திராட்சை பழச்சாறு கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களைக் கொண்டு கிறிஸ்மஸ் கேக்கிற்கு தேவையான உலர் பழங்கள் மற்றும் பழச்சாறு கலவை தயாரிக்கப்பட்டன. உலர் பழத்தின் மீது பலசாரை ஊற்றி வாடிக்கையாளர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகப் பாடல் பாடி உலர் பழங்கள் கலவை செய்தனர்.

இந்த கலவையை 15 நாட்களுக்குப் பதப்படுத்தி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன் 750 கிலோ எடையில் ராட்சத பிளம் கேக் தயாரிக்க உள்ளதாகச் சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரேஷன் அரிசியில் தவழ்ந்த எலி குஞ்சுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details