கோவை மாவட்டம் சூலூர் அருகே கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு சிங்காநல்லூரைச் சேர்ந்த நந்தகுமார்(38) என்பவர் பணம் எடுக்க ஏடிஎம் வந்துள்ளார்.
கனரா வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி கண்டுபிடிப்பு - ஸ்ம்மர் கருவி கண்டுபிடிப்பு
கோவை: சூலூர் அருகே கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டதை பயனாளி கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது வங்கி கார்டை இயந்திரத்தில் செலுத்தியபோது, அது சிக்கிக்கொண்டது. அதனால் நந்தகுமார் கார்டை வேகமாக இழுத்துள்ளார். அப்போது, கார்டுடன் சேர்ந்து இயந்திரத்தில் இருந்து ஒரு கருவியும் வந்தது. இதனால் சந்தேகமடைந்த நந்தகுமார், ஏடிஎம் இயந்திரத்தை பார்த்தபோது அதில் கேமராவுடன் கூடிய ஒரு கருவி ஒட்டிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளருக்கும், சூலூர் காவல் துறைக்கும் நந்தகுமார் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த சூலூர் சிறப்பு காவல் அதிகாரி செந்தில்குமார், அந்த குறிப்பிட்ட இயந்திரத்தை ஆய்வு செய்தார். பின்னர் நந்தகுமார் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.