கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எண்-1811 செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர்வைசராக உதகையைச்சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்தை, தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்குச்சென்றுள்ளார். அப்போது, சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே வந்து கொண்டிருந்தபோது, பல்சர் மற்றும் கே.டி.எம் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜய் ஆனந்த்தை பின்தொடர்ந்து, இருசக்கரவாகனம் மீது மோதி கீழே விழச்செய்தனர்.
பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீச்சரிவாள் காட்டி மிரட்டி, பணத்தை கொள்ளையடிக்க இளைஞர்கள் முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த சிலர் அக்காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர்.