கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றியும், இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள் மளிகைக்கடை, சத்துணவுக்கூடம், ரேசன்கடைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை நாசம் செய்வது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் இரண்டு யானைகள் தாய்முடி எம்.டி டிவிசனில் துளசி மகளிர் சுயஉதவிக்குழு நியாயவிலைக் கடையிலிருந்த சுவர் மற்றும் தகரத்தை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த அரிசி, பருப்பு, சக்கரை ஆகியவற்றை சேதம் செய்துள்ளது.