144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் முக்கியச் சாலைகள் அனைத்தும் காவல் துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகரில் ஒரு சில சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களைக் காவல் துறையினர் தன்னார்வலர்களின் உதவியுடன் முடிதிருத்தம்செய்து, குளிக்க வைத்து, உணவுப் பொருள்களை வழங்கி அவர்களைக் காப்பகங்களில் அனுமதித்துள்ளனர்.