தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒயிலாட்டம் ஆடிய மாவட்ட ஆட்சியர் - Coimbatore District Collector Sameeran

கோவையில் நடைபெற்ற சுதந்திர தின அமுத பெருவிழாவில் அம்மாவட்ட ஆட்சியர் கலைஞர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடினார்.

ஒயிலாட்டம் ஆடிய மாவட்ட ஆட்சியர்
Etv Bharat

By

Published : Nov 21, 2022, 7:18 AM IST

Updated : Nov 21, 2022, 7:48 AM IST

கோவை : கருமத்தம்பட்டியில் சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒயிலாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

சுதந்திர தின அமுத பெருவிழா
சுதந்திர தின அமுத பெருவிழா

இதில் ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் நடனமாடினர். நடனத்தை ரசித்த ஆட்சியர் சமீரன் ஒயிலாட்ட கலைஞர்களுடம் இணைந்து பம்பை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒயிலாட்டம் ஆடிய மாவட்ட ஆட்சியர்

பின்னர் நடனக்கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடினார். இசைக்கு ஏற்ப ஆட்சியர் நடனம் ஆடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க : சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயிலின் கோபுரத்தில் தீ விபத்து - நடந்தது என்ன?

Last Updated : Nov 21, 2022, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details