கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியின் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை உள்ளிட்டப் பல அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதில் கோபால்சாமி மலை அருகே உருவாகி பல்வேறு கிராமங்களைக் கடந்து, ஆழியார் ஆற்றில் கலக்கும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் செய்தி எதிரொலி - எம்.பி., ஆய்வு வெள்ளத்தில் மூழ்கின
குறிப்பாக, தென்சித்தூர் கிராமத்திற்கு அருகிலும், பெத்தநாயக்கனூர் கிராமம் கெங்கம்பாளையம் அருகிலும் பாலாற்றின் குறுக்கே உள்ள இரு தரைப்பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வு செய்ய வந்த சண்முக சுந்தரம் எம்.பி., எம்.பி. ஆய்வு
இதனையடுத்து இரண்டு இடங்களையும் சண்முகசுந்தரம் எம்.பி., மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் இரண்டு இடங்களிலும் உயர்மட்ட பாலங்கள் கட்ட முடிவு செய்துள்ளதாக எம்.பி., தகவல் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் எதிரொலி - சண்முகசுந்தரம் எம்.பி., ஆய்வு இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!