தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - கொள்ளையர்கள் கைவரிசை - கப்பளாங்கரை மகாலட்சுமி அம்மன் பெருமாள் கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கப்பளாங்கரை மகாலட்சுமி அம்மன் பெருமாள் கோயிலில் நான்கு ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

theft

By

Published : Sep 14, 2019, 10:23 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இக்கோயிலில் இரண்டு அம்மன் ஐம்பொன் சிலைகளும், இரண்டு பெருமாள் ஐம்பொன் சிலைகளும் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சுப்ரமணியம் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறந்தபோது அம்மன் தலையில் இருந்த வெள்ளி கிரீடம், வெள்ளி ஒட்டியானம், தங்கதாலி மற்றும் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஐம்பொன் சிலைகளும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கப்பளாங்கரை மகாலட்சுமி அம்மன் பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

பின்பக்க ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலைகள், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு விரைந்த நெகமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை நோட்டமிட்டு திருடுவதை ஒரு கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே கிராம மக்கள் கொள்ளையடிக்கப்பட்ட அம்மன் சிலைகள் மற்றும் நகைகளை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details