கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து மிரட்டிய நான்கு பேரை போலீசாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதபடும் பார் நாகராஜ் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவர் நடத்தி வந்த பாரை, பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இந்நிலையில் பார் நாகராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'நான் அவன் இல்லை' - பார் நாகராஜ் வீடியோவில் கதறல்! - pollachi
கோவை: 'ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை' என்று, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய பார் நாகராஜ், வாட்ஸ்ஆப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாகராஜ்
இந்நிலையில் பார் நாகராஜ் இளம்பெண் ஒருவரை பாலியல் சித்ரவதை செய்யும் வீடியோ வாட்ஸ்அப்பில் நேற்று வெளியானது. இதையடுத்து, ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், அந்த வீடியோவில் உள்ளது பாலியல் வழக்கில் தொடர்புடைய சதீஷ் எனவும், தான் நிரபராதி என்று அவர் பேசிய வாட்ஸ்ஆப் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது கோவை, பொள்ளாச்சி வட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.