கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை தடாகம் சாலை அருகேவுள்ள அரசு மதுபானக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ஊரடங்கையும் மீறி சட்டவிரோதமாக மது விற்பனை! - கரோனா தடுப்பு நடவடிக்கை
கோவை: தடாகம் சாலை அருகேவுள்ள அரசு மதுபானக் கடையில், ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், கதவு வெளியில் மூடப்பட்டும், மதுப் பிரியர்கள் கதவை திறந்து மது வாங்கி செல்கின்றனர். மேலும் அந்த கடை இருக்கும் இடத்திற்கு அருகிலேயே காவல் சோதனைச் சாவடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலத்தில் வெளியில் வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர ஆணையர் கூறிய நிலையில், மெயின் ரோட்டிலேயே அரசு மதுபானக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதும், அதனை காவல்துறையினர் தடுக்காமல் இருந்து வருவதும், அரசின் நடவடிக்கைகள் மீது பொதுமக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது.