கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவளித்து ஜோதிமணி எம்.பி., வாக்கு சேகரித்தார். அப்போது ஜோதிமணி அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டின் அருகில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பேசியதாவது, 'மக்கள் என்ன வேலை செய்கிறார்களோ அதே வேலையை அவர்களது குழந்தைகளும் செய்யட்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். இது தான் ஆர்.எஸ்.எஸ் சித்தாங்கம். இதைத்தான் மோடி நிறைவேற்ற நினைக்கிறார். இதைத்தான் அதிமுக பின்வாசல் வழியாக நிறைவேற்ற நினைக்கிறது.
'ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டிருக்கமாட்டார்’- ஜோதிமணி - ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விட்டிருக்கமாட்டார் - ஜோதிமணி
கோயம்புத்தூர்: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கரூர் எம்.பி., ஜோதிமணி பரப்புரை மேற்கொண்டார்.
ஜோதிமணி பரப்புரை
பாஜக-வை புற வாசல் வழியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தவர்கள் எஸ்.பி.வேலுமணியும் தங்கமணியும். ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டிருக்கமாட்டார்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுக vs திமுக: புதிய வேட்பாளர்களும் எதிர் போட்டியாளர்களும்!
Last Updated : Mar 28, 2021, 10:21 PM IST