தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சில தினங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிடுவேன் - புகழேந்தி - அமமுக நிர்வாகி புகழேந்தி

கோவை: இன்னும் சில தினங்களில் பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன் என அமமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும் புகழேந்தி

By

Published : Sep 17, 2019, 5:16 PM IST

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அமமுக நிர்வாகி புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கோவையில் தான் பேசிய வீடியோவை வெளியிட்டது மிகவும் மோசமான செயல் எனவும், இதன்மூலம் இன்னும் சில தினங்களில் பெரிய திருப்பம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கட்சியில் இருந்து என்னை நீக்க முடியாது என கூறிய அவர், அமமுக என்னுடைய கட்சி மட்டுமல்லாமல் எங்களுடைய கட்சியாகும் என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் புகழேந்தி
மேலும் பேசிய அவர், அமமுகவில் இருந்து சென்றவர்கள் யாரும் பணத்துக்காக செல்லவில்லை, இதுதொடர்பாக சசிகலாவிடம் பேசி உள்ளேன். சசிகலா பிப்ரவரி மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details