கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநீர் பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுப்படுத்தி விட்டார். இதற்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம்.